யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை கடந்த 09ஆம் திகதி உடைத்து கொள்ளையிட்ட நபர் இன்று (13) கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் – சங்கானையை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு மந்துவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து திருட்டுப்போனதாக கூறப்படும் சங்கிலி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் (12) மந்துவிலை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தில் கைதான நிலையில், அவர் சம்பவத்தில் தொடர்பற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையிலேயே ஆலய சிசிடீவியில் அகப்பட்ட திருடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆலயத்தில் சங்கிலி, 40000 பணம் மற்றும் ஐம்பொண்னாலான கலசம் உட்பட 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.