12 இலட்சம் மாணவர்களுக்கு போசாக்கு உணவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 14, 2020

12 இலட்சம் மாணவர்களுக்கு போசாக்கு உணவு!

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு போசாக்கு உணவு நிறைந்த உலர் உணவு பொதியொன்றை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடந்த நாட்களில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத காரணத்தினாலேயே, இவ்வாறான உலர் உணவு பொதி வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

கொனாரோ தொற்று காரணமாக பாடசாலைகளில் அம்பியூலன்ஸ் அறை ஒன்றை ஸ்தாபிப்பதற்காக இந் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து சுகாதார ஆலோசனைகளையும் அதிபர்களுக்கு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனைத்து பாடசாலைகளுக்கும் 15,000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பித்ததும் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வலயக்கல்வி பணிமனைகள் ஊடாக மாணவர்களின் வீடுகளுக்கே குறித்த உலர் உணவு பொதி அனுப்பிவைக்கப்படவுள்ளது.