
குறித்த 13 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியாகும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த இந்திய வியாபாரிக்கு, கொரோனா தொற்று இருப்பதாக நேற்று வெளியான தகவல், இன்றே உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்தே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.