
அதேபோல், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களின் மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவிகிதமும் வருகைப் பதிவை அடிப்படையாகக் கொண்டு 20 சதவிகித மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதேபோல், தேர்ச்சி பெறாதவர்களுக்காக நடத்தப்பட இருந்த மறுதேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.