நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை மருந்து… பரிசோதனைக்காக காத்திருக்கிறது முல்லைத்தீவு பெண்ணின் உற்பத்தி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 9, 2020

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை மருந்து… பரிசோதனைக்காக காத்திருக்கிறது முல்லைத்தீவு பெண்ணின் உற்பத்தி!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இயற்கை உணவு உற்பத்தியில் ஈடுபடும் பெண்ணொருவர், மனித உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை மருந்தொன்றை தயாரித்துள்ளதாக கூறியுள்ளார்.

தகவலறிந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், அந்த பெண்ணின் உற்பத்தி மையத்திற்கு சென்று அதை பார்வையிட்டுள்ளார். அத்துடன் சுகாதார அமைச்சு அதிகாரிகளிற்கும் அது பற்றி அறிவித்துள்ளார்.

நமது சூழலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி அதிகமுள்ள மூலிகைகளில் இருந்து மூலிகை மருந்தொன்றை இவர் தயாரித்துள்ளார். கொரொனா அபாயமுள்ள இந்த காலகட்டத்தில் நோயெதிர்ப்பு சக்தியை மனித உடலில் அதிகரிக்க இந்த மூலிகை உதவுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எனினும், இதுவரை முறையான விஞ்ஞான பரிசோதனைகளிற்கு இந்த மூலிகை மருந்து உட்படவில்லை.

பரிசோதனைக்கு உட்படுத்த தொடர்புடைய திணைக்களங்களிறகு அறிவிக்குமாறு அண்மையில் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிகளை பெண்மணி தொடர்பு கொண்டிருந்தார். எனினும், ஊரடங்கு காலத்தில் மூலிகை மருந்தை கொழும்பிற்கு அனுப்புவதில் சிக்கலுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாக பெண்மணி தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.



இந்த நிலையில் மாவட்ட அரச அதிபர் விடயத்தை அறிந்து, தொழிற்சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கிருந்தபடியே கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சி்ன் கீழுள்ள தொடர்புடைய அதிகாரிகளுடன் தொலைபேசி வழியாக பேசி விடயத்தை தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பிற்கு நேரில் வந்து, மூலிகை மருந்தின் மாதிரிகளை விரைவில் பெற்றுக்கொள்வதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.