தமிழகத்தில் திருமணமான பெண்ணை நிர்வாணப்படுத்தி, பிளேடால் கிழித்து கை, கால்களை முறித்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பாலமலை கெம்மம் பட்டியை சேர்ந்த சின்னகுள்ளன். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதிக்கு பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், கலாவிற்கு, அப்பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்பவருடன் முறையற்ற பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை கணவரும் கணவரின் உறவினர்களும் பலமுறை கண்டித்துள்ளனர். சமீபத்தில், கலாவை அழைத்து ஊர் பஞ்சாயத்தில் வைத்து காதலன் சின்னசாமியை சந்திக்க கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
ஆனால் கலாவோ, சம்பவத்தன்று காட்டிற்கு விறகு எடுத்து வர செல்வதாக கூறிவிட்டு, சின்னச்சாமியை சந்தித்து வந்துள்ளார்.
இதை அறிந்த கணவர் சின்னக்குள்ளனின் உறவினர்கள், கலாவை காட்டுப்பகுதியில் வைத்து ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியதோடு உடலில் பல இடங்களில் பிளேடால் கிழித்ததோடு, இடது கையையும், வலது காலையும் முறித்து தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர்.
மறுநாள் காலை அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கலாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கலாவை கொலை செய்ய முயன்றதாக கணவர் சின்னகுள்ளனின் உறவினர்களான செல்லப்பன்,குமார், ((தங்கராஜ)), ரவி ஆகிய 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.
கணவரும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் காதலனுடன் சுற்றிவந்த கலாவுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தாக்கியதாகவும், ஒரு கட்டத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து தூக்கி வீசி விட்டு சென்றதாகவும் அவர்கள் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கலா மீதான இந்த தாக்குதல் குறித்து கணவர் சின்னகுள்ளனிடம் விசாரணை நடத்த வீட்டிற்குச் சென்ற பொலிசார், அங்கு அவர் சாராயம் காய்ச்சுவதை அறிந்து அவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.