தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 970 ஆக அதிகரிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 17, 2020

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 970 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 970ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது புதிதாக 06 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 6 கொரோனா தொற்றாளர்களும் கடற்படை உறுப்பினர்கள் என அரசாங்க தகவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுறுதியான 18 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று வெளியேறியுள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது