முல்லைத்தீவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 3, 2020

முல்லைத்தீவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில்  கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


நட்டாங்கண்டல், கரும்புள்ளியான் கிராமத்தில் இன்று (3) இந்த சம்பவம் இடம்பெற்றது.

பிரபாகரன் ரொசாந்தன் (23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இளைஞன் காணாமல் போயிருந்தார். இன்று கிணற்றிற்கு நீரெடுக்க உறவினர்கள் சென்றபோது, அவர் சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இந்த இளைஞன் அம்மப்பா, அம்மம்மாவுடன் வாழ்ந்து வந்தார். அத்துடன் கலைத்துறையிலும் ஈடுபாடு காட்டி வந்தவர்.