நீரில் மூழ்கி 4 பெண்கள் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 3, 2020

நீரில் மூழ்கி 4 பெண்கள் பலி!

தாம்பரம் அருகே மணிமங்கலம் ஏரியில் குளித்த 3 பெண்கள் உயிரிழந்தனர். காப்பாற்ற முயன்ற பெண்ணும் இறந்த சம்பவம் கரசங்கால் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படப்பை அருகே கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா(35), திலகா(48) இருவரும் சகோதரிகள். இவர்கள் உறவினர்களின் குழந்தைகள் பூர்ணிமா(8) கலையரசி(17), சத்யா(13), ஹரி(10) ஆகியோருடன் துணி துவைக்கவும், குளிக்கவும் மணிமங்கலம் ஏரிக்கு நேற்று சென்றனர்.
சித்ரா, திலகா ஆகியோர் துணிகளை துவைத்து கொண்டிருக்க, மற்றவர்கள் நீரில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் நீரில் மூழ்கினர். இவர்களின் கூச்சலை கேட்ட சித்ரா, திலகா இருவரும் காப்பாற்ற முயன்றனர். அப்போது ஹரி, திலகாவை தவிர மற்ற 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இவர்களில் திலகா குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
இறந்தவர்களின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.