தமிழக்தில் கொரானாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை திருமணம் செய்த ஆண்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 24, 2020

தமிழக்தில் கொரானாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை திருமணம் செய்த ஆண்!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு இன்று திருமணம் ஆன நிலையில், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் பணிபுரிந்து வந்த கெங்கவல்லியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு, கடந்த ஜனவரி மாதமே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதற்காக கடந்த 21-ஆம் திகதி சென்னையில் இருந்து சேலம் வந்தவருக்கு மாவட்ட எல்லையான நத்தக்கரை சோதனைச்சாவடியில் செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே நிச்சயித்தபடி, குடும்பத்தினர் முன்னிலையில் இன்று வீட்டிலேயே திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து புதுமாப்பிள்ளையை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்த சுகாதாரத்துறையினர், புதுப்பெண்ணையும், திருமணத்தில் பங்கேற்றவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.