காணிகளை கேட்டு போராட்டம் செய்தார்கள் - ஆனால் மரங்களை நட்டு செழிப்பாக வைத்திருக்க மாட்டார்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 16, 2020

காணிகளை கேட்டு போராட்டம் செய்தார்கள் - ஆனால் மரங்களை நட்டு செழிப்பாக வைத்திருக்க மாட்டார்கள்

காணிகளை கேட்டு போராட்டம் செய்தார்கள், ஆனால் கொடுத்த காணிகளை பற்றைகள் வளர்ப்பதற்கே பயன்படுத்துகிறார்கள். குடியேறாவிட்டாலும் காணிகளில் மரங்களையாவது நடுங்கள் அது பயனளிக்கும்.


மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய கூறியிருப்பதுடன், மக்களுடைய காணிகள் பற்றைகளால் நிரப்பியிருப்பது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தியாகி அறக்கட்டளையினால் வீடு ஒன்று அமைத்து வழங்கப்பட்டது. இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்று

கருத்துரைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முப்படையினர் வசமிருந்த பெருமளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

அவை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன பொதுமக்களின் மிகக் குறைதளவான காணிகளிலேயே முகாமை அமைத்து உள்ளன.

எனினும் விடுவிக்கப்பட்ட காணிகள் பலவற்றின் மக்கள் மீள்குடியமரவில்லை. அவர்களது காணிகள் படையினரிடமிருக்கும் போது செழிப்பாக இருந்தன. எனினும் இப்போது பராமரிப்புகளற்று பற்றைக் காணிகளாக உள்ளன.


எனவே மக்கள் தற்போது மீள்குடியமராவிடினும் காணிகளை பராமரித்து பயன்தரு மரங்களை நடவேண்டும் தென்னை மரங்களை நடுவதனால் சில வருடங்களில் நல்ல பயனைப் பெற முடியும் என்றார்.