முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 4ம் நாள் நினைவு நாள் குருநகா், புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தமிழாராச்சி மாநாட்டு நினைவிடம் ஆகியவற்றில் ஈகை சுடரேற்றப்பட்டு நினைவுகூரப்பட்டது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந் நினைவேந்த லில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாி உள்ளிட்ட பொலிஸாா் நினைவேந்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தவா்களையும், குறிப்பாக ஊடகவியலாளா்களையும் தனித்தனியாக தனது தொலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தாா்.
மேலும் சமூக இடைவெளி பேணப்படவில்லை என பொலிஸாா் குற்றஞ்சாட்டியதுடன், யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் கைது செய்வேன் என அச்சுறுத்தியிருந்தாா்.