ஈழத்துத் திரைப்படங்கள் என அறியப்பட்ட சொற்பமான திரைப்படங்களில் நடித்த ஒரு சிலரே இன்றும் எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் குணபதி கந்தசாமி. பாபாஜி என்ற புனைபெயருடன் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் அவர் சிறுவயது முதலே திரைப்படங்கள் மீதான காதலை வளர்த்துக் கொண்டவர். ஈழத்தின் மிகப் பிரபலமான திரைப்படங்களுள் ஒன்றான வாடைக்காற்று திரைப்படம் மூலம் அறிமுகமாகியவர்.
பல மேடை நாடகங்களில் நடித்துப் பிரபலமானவர். சுவிஸ் மண்ணில் அவர் தயாரித்த 'இது காலம்" திரைப்பட வெளியீட்டின் போது கதிரவன் உலாவிற்காக அவர் வழங்கிய சிறப்புச் செவ்வி.