மழைப் பெய்யாத நேரத்தில் வானத்தில் இருந்து விழுந்த மீன்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, May 1, 2020

மழைப் பெய்யாத நேரத்தில் வானத்தில் இருந்து விழுந்த மீன்கள்

மஹியங்கனை பிரதேசத்தில் நேற்று வானத்தில் இருந்து மீன்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மஹியங்கனை பெரக்கும் பிளேஸ் என்ற பகுதியில் இவ்வாறு மீன்கள் வானத்தில் இருந்து விழுந்துள்ளன.

சாதாரணமாக மழைப்பெய்யும் போது மழையுடன் மீன்கள் விழுவதுண்டு எனினும் மழைப் பெய்யாத நேரத்தில் இந்த மீன்கள் வானத்தில் இருந்து விழுந்த சம்பவம் தொடர்பாக பிரதேச மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

மஹியங்கனை பிரதேசத்தில் குளங்கள் இருப்பதாகவும் எனினும் வானத்தில் இருந்து விழுந்த மீன்கள் குளத்து மீன் கிடையாது எனவும் அவை கடல் மீன்களை போன்று இருப்பதாகவும் பிரதேச வாசிகள் கூறியுள்ளனர்.

குளம் மற்றும் கடல் பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்படும் மேற்காவுகையின் போது மீன்கள் மேற்காவுகை மூலம் வானத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதுடன் மழைப் பெய்யும் போது அவை மழை நீருடன் சேர்ந்து பூமியில் விழுவதுண்டு மழையும் பெய்யாது நேரத்தில் மீன்கள் விழுந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.