யாழில் கணவன் மனைவியால் நிறுத்தப்பட்ட கொரோனா பரிசோதனை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 5, 2020

யாழில் கணவன் மனைவியால் நிறுத்தப்பட்ட கொரோனா பரிசோதனை

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.


பல்கலைகழக விரிவுரையாளர் மற்றும் அவருடைய கணவரின் விசமத்தனமான பிரச்சார நடவடிக்கைகளாலேயே பரிசோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனைகள் இடம்பெற்றுவந்த நிலையில், குறித்த பரிசோதனை நடவடிக்கைள் தொடர்பாக பெண் விரிவுரையாளரும் அவருடைய க ணவரும் பல்கலைகழகத்திற்குள்ளும், சமூக மட்டத்திலும் விசமனத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.

இதனால் எழுந்துள்ள குழப்பமான நிலையை கருத்தில் கொண்டு இரு நாட்களுக்கு கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக யாழ்.பல்கலைகழக மருத்துவபீட தகவல்கள் தொிவிக்கின்றன.