யாழ்.தீவக பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் கை துண்டாகும் வகையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 3, 2020

யாழ்.தீவக பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் கை துண்டாகும் வகையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!


யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு உட்பட்ட சின்னமடு பகுதியில், வாள் வெட்டுக்கு இலக்காகி கை துண்டாகும் நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை ஊர்காவற்றுறை சின்னமடுப் பகுதியில் காலை 10 மணியளவில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்ப்பட்ட மோதல் வாள் வெட்டு வரை சென்றுள்ளது.

இதன் போது 31 வயதுடைய ஒருவரது கை துண்டாகும் வகையில் வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் இப்பகுதியில் ஏற்ப்பட்ட சிறு தகராறு இன்று குழு மோதலாக மாறியுள்ளது.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வாள் வெட்டுக்கு இலக்கானவர் ஆபத்தான நிலையில் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.