குரங்குகள் மீது கொரோனா தடுப்பூசி சோதனையை தாய்லாந்து தொடங்கி உள்ளது.
தாய்லாந்து உருவாக்கிய தடுப்பூசி, வெற்றிக்கரமாக எலிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது குரங்குள் மீது சோதனை செய்யப்படுகிறது.
இதன் முடிவுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் தெரிந்துவிடும் என்று தாய்லாந்தின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் சுவித் மெசின்சே தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சோதனை வெற்றியடையும்பட்சத்தில் தடுப்பூசிகள் தயாரிக்க 2 நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்