கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்னும் பின்னும் எடுத்த புகைப்படம் – கொரோனா படுத்திய பாடு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 21, 2020

கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்னும் பின்னும் எடுத்த புகைப்படம் – கொரோனா படுத்திய பாடு

அமெரிக்காவில் கொரோனா நோயாளி ஒருவர் பாதிப்புக்கு முன்னரும் பின்னரும் தமது உடலில் ஏற்பட்ட அதிர்ச்சி மாற்றங்களை புகைப்படமாக வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.


மைக் ஷூல்ட்ஸ், சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஒரு செவிலியர். மருத்துவ ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லாத போதும்,

கொரோனாவுக்கு இலக்கான நிலையில் அவர் 6 வார காலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

43 வயதான மைக் ஷூல்ட்ஸ், கடந்த மார்ச் மாதம் மியாமி கடற்கரையில் நடந்த ஒரு விருந்தில் கலந்து கொண்டார்.

கொரோனா தொடர்பில் அதன் அபாயங்கள் குறித்து தனக்குத் தெரியும் என்று ஒப்புக் கொண்ட அவர்,

ஆனால், தாம் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதால் கொரோனா பாதிப்புக்கு இலக்காகும் வாய்ப்பு மிக மிக குறைவு என நம்பியுள்ளார்.

அந்த விருந்துக்கு பின்னர் ஒரு வாரம் கடந்த நிலையில், தமது நண்பரை சந்தித்த மைக், கால நிலை தமக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனவும், ஆனால் காய்ச்சல் போன்ற ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் அடுத்த இரு நாட்களில் அவரது நிலை தலைகீழானது. காய்ச்சல் உச்சத்தில் எகிறியதுடன் மூச்சுவிடவும் கடுமையாக திணறியுள்ளார்.

விளைவு, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, நான்கரை வாரங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

வாரத்தில் 6 அல்லது 7 முறை உடற்பயிற்சி கூடம் செல்லும் மைக் ஷூல்ட்ஸ், கொரோனாவுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்படும்போது 86 கிலோ உடல் எடையுடன் இருந்தார்.

ஆனால் கொரோனா குணமாகி குடியிருப்புக்கு திரும்பும்போது அவரது உடல் எடை 63 கிலோவுக்கு சரிந்துள்ளது.

சுமார் 6 வார காலம் செயற்கை சுவாசத்தில் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த பின்னர் தமது புகைப்படங்களை வெளியிட்ட மைக் ஷூல்ட்ஸ், கொரோனாவால் தற்போது தமது நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கடின முயற்சியால் தாம் மீண்டும் அந்த பழைய நிலைக்கு திரும்புவேன் எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.