தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 13, 2020

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 891ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 889 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 500 பேர் இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அத்துடன், 382 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பதுடன், 09 பேர் குறித்த தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.