சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் 507 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்ற நிலையில், இதுவரை 162 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
கொரோனா தொற்றால் இலங்கையில் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.