இந்தியாவில் இளைஞர் ஒருவரை 3 ஆண்டுகளாக விடாமல் துரத்தும் காக்கை கூட்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 24, 2020

இந்தியாவில் இளைஞர் ஒருவரை 3 ஆண்டுகளாக விடாமல் துரத்தும் காக்கை கூட்டம்!இந்தியா மத்திய பிரதேசத்தில் மூன்று ஆண்டுகளாக இளைஞர் ஒருவரை பழி வாங்குவதற்கு காக்கைக் கூட்டம் துரத்தி வருவது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தைச் சேர்ந்த சிவா கேவத்.

இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காக்கைகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றார். இதனால் கையில் எப்பொழுதும் குச்சியுடனே அலைந்து வருகின்றார்.
காரணம் என்னவெனில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வலையில் சிக்கியிருந்த காக்கைக் குஞ்சைக் காப்பாற்ற சென்ற தருணத்தில், எதிர்பாராத விதமாக அந்த குஞ்சு இவரது கையில் இருக்கும்போதே உ யிரிழந்துள்ளது.

அன்று முதல் இன்று வரை தனது குஞ்சின் இறப்பிற்கு காரணம் இவர் தான் என்று தவறாக புரிந்துகொண்டு இவரைத் துரத்தி துரத்தி பழி வாங்கிக்கொண்டிருக்கின்றதாம்.

இதுகுறித்து குறித்த நபர் கூறுகையில், நான் காப்பாற்ற நினைத்து செய்த காரியம் கடைசியில் எனக்கு இவ்வளவு பெரிய சி ரமத்தினை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகமாகும் காக்கை தொல்லைகளினால் கால்நடை மருத்துவரிடமும் ஆலோசனைக் கேட்டபோது காக்கைக்கு அறிவுத்திறன் அதிகம் என்றும் அதனிடம் த வறாக நடந்துகொண்டால் இவ்வாறு தான் செயல்படும் என்றும் அவர்கள் மிகவும் சாதாரணமாக கூறியுள்ளனராம்.

காக்கை கூட்டத்தால், சிவாவுக்கு ஏற்பட்டுள்ள சோகம் அப்பகுதி மக்களுக்கு பொழுதுபோக்காகிவிட்டது. அவர் வெளியே வந்தாலே காக்கைகள் அவரை வட்டமிடத் தொடங்குவதால், சிறுவர்கள் கூட்டமும் அவரை பின்தொடர்ந்து செல்கின்றதாம்.