உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
குறித்த வைரஸ் தொற்றால் உலக அளவில் இலட்சத்திற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 584 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுள்ள நிலையில்,
கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட இடம் ஒன்றில், தனிமைப்படுத்தலில் உள்ள தமிழ் பெண் குழந்தை ஒருவருக்கு பிறந்த நாள் பரிசாக கேக் ஒன்றினை வழங்கி, அந்தக் குழந்தையை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் சிங்கள இராணுவவீரர் ஒருவர்.
நாமும் அந்தக் குழந்தையையும் இராணுவ வீரரின் மனிதாபிமான பணியில் அவரையும் வாழ்த்துவோம் என சமூக ஆர்வலர் ஒருவர் முகநூலில் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்