சத்தீஸ்கர் மாநிலத்தின் தொலைதூர பழங்குடி கிராமங்களில் பழங்குடியினரே கரோனா வைரஸ் தங்கள் கிராமங்களை அண்டாதிருக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து பஸ்தாரில் உள்ள பழங்குடியினரை இதுவரை கரோனா தொற்றவில்லை.
காரணம், இவர்கள் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் செக்போஸ்ட்களை உருவாக்கி வெளியிலிருந்து வருபவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்துகின்றனர். மேலும் பணிக்கு வெளியூருக்குச் செல்பவர்களையும் வெளியிலேயே தனிமைப்படுத்துகின்றனர்.
இந்தப் பாதுகாப்புப் பணியில் சர்வ ஆதிவாசி சமாஜ் என்ற அமைப்பு முன்னணியில் இருந்து செயல்படுகிறது. மாவோயிஸ்ட்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பஸ்தார் பழங்குரிப் பகுதியில் 30 லட்சம் மக்கள் வாழ்ந்துவந்தாலும் இன்னும் ஒரு கரோனா வைரஸ் கூட அங்கு ரிப்போர்ட் ஆகவில்லை என்பதன் பின்னணியில் கடுமையான இவர்களின் காவல்பணி உள்ளதாக இவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தெற்கு சத்திஸ்கரிலிருந்து பஸ்தார் பிரிவு மக்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த நேரத்தில்தான் ஆந்திரா அல்லது தெலுங்கானாவுக்குச் சென்று மிளகாய் பறிப்பதற்காகச் செல்வார்கள், ஆனால் லாக்டவுனினால் நூற்றுக்கணக்கனோர் கிராமத்துக்குத் திரும்பினர், வெளியிலிருந்து வருபவர்களை கிராமத்துக்குள் நுழையாமல் தடுக்கின்றனர், ஆனால் இதனால் பகைமை எதுவும் ஏற்படாமல் செய்கின்றனர். இவர்களுக்கு தனிமைக் காலக்கட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
பஸ்தார் பழங்குடிப்பிரிவுப் பகுதியில் இந்த நடவடிக்கைகளுக்கு மாவோயிஸ்ட் ஆதரவும் உள்ளது.