வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடல் பகுதியில் 150kg கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்று (22) காலை எட்டு மணி அளவில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது இடம் பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களையும் மீட்கப்பட்ட கஞ்சாவையும் காவல்துறை ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.