வீடு செல்ல பாஸ் கொடுக்கவில்லை!! முல்லைத்தீவு இளைஞன் யாழ்ப்பாணத்தில் தற்கொலை!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 8, 2020

வீடு செல்ல பாஸ் கொடுக்கவில்லை!! முல்லைத்தீவு இளைஞன் யாழ்ப்பாணத்தில் தற்கொலை!!

தொடரும் ஊரடங்கால் இன்று யாழில் நடந்த சோகச் சம்பவம்

மு/குரவில் தமிழ்வித்தியாலய மாணவனின் சகோதரனும் பழைய மாணவனும் ஆகிய உடையார்கட்டு தெற்கை பிறப்பிடமாக கொண்ட சுதாகரன் ருபிகன் எனும் இளைஞர் 08/04/2020 இன்றைய தினம் காலையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக யாழ்ப்பாணத்தில் வேலை செய்து வரும் இவர் நீண்ட நாள் ஊரடங்கின் காரணமாக வேலை இன்மையாலும் குடும்பத்தை பிரிந்தமையினாலும் அதிகம் பாதிக்கப்பட்டார்.
இது ஒரு புறமிருக்க! ஊர் போக பாஸ் அனுமதியும் கிடைக்காமையும் ,மன விரக்தியும் தற்கொலை செய்ய காரணங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.தெளிவான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை