பல்பொருள் விற்பனை நிலையத்தில் திடீரென பாரிய தீ விபத்து! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 18, 2020

பல்பொருள் விற்பனை நிலையத்தில் திடீரென பாரிய தீ விபத்து!

நுவரெலியா நகரிலுள்ள பல்பொருள் விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறித்த விற்பனை நிலையம் பகுதியளவு எரிந்து சாம்ராகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீ விபத்து இன்று 18.04.2020 மதியம் 12 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

மேலும், நுவரெலியா பொலிஸார், மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர், பொது மக்கள், இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.


தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.