சிறு தோட்ட தேயிலை உரிமையாளர்கள், பிராந்திய செய்தி தொடர்பாளர்கள், தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட பல துறையை சார்ந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம தீர்மானித்துள்ளது.
சமூக பாதுகாப்பு, சுகாதார மற்றும் சுதேச அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
சமூர்த்தி உத்தியோகத்தர் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 655 மில்லியன் கிடைக்க பெற்றுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான குழு நேற்யை தினம் ஒன்றுக் கூடியதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த குழுவின் தலைமைத்துவத்தை மத்திய வங்கிய் ஆளனர் வகிக்கின்றமை குறி;ப்பிடதக்கது.