வெலிசறை கடற்படை தளத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா - 414 ஆக கிடுகிடுவென எகிறும் இலங்கை கொரானா எண்ணிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 24, 2020

வெலிசறை கடற்படை தளத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா - 414 ஆக கிடுகிடுவென எகிறும் இலங்கை கொரானா எண்ணிக்கை

வெலிசறை கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படையினர் கொரொனா தொற்றிற்குள் உள்ளாகியுள்ளனர்.

இதனால், வெலிசறை கடற்படை முகாமில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 அக உயர்ந்துள்ளது.

முகாமிற்குள் தொற்று அதிகரித்ததையடுத்து, முகாமிலுள்ள அனைத்து கடற்படையினரும் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர். அத்துடன், விடுமுறை மற்றும் கடமை நிமித்தம் அண்மைய நாட்களில் முகாமிலிருந்து வெளியேறிய அனைத்து கடற்படையினரையும் மீளவும் முகாமிற்கு அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடற்படை தளத்திற்குள் தனியான தனிமைப்படுத்தல் மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

414 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 46 பேர் இனங்கணப்பட்டுள்ளனர்.