பஸ் விபத்தில் ஒருவர் பலி - 29 பேர் படுகாயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 15, 2020

பஸ் விபத்தில் ஒருவர் பலி - 29 பேர் படுகாயம்



வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி - கொழும்பு பிரதான வீதியில் வரக்காபொல நகர பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


வரக்காபொல பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி மரக்கறி வகைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் கொழும்பிலிருந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலை சம்பூர் பகுதியை நோக்கி ஆட்களை ஏற்றிச் சென்ற கடற்படையின் பஸ் இரண்டுடன் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் கடற்படை வீரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


காயமடைந்தவர்கள் அணைவரும் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விபத்தினை அடுத்து, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துசெல்லப்பட்ட மூவர் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களில் இருவர் பின்னர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்