வடக்கு மாகாணத்தில் 20 பேரிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கொரானா இல்லை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 8, 2020

வடக்கு மாகாணத்தில் 20 பேரிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கொரானா இல்லை!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டவ்களைச் சேர்ந்த 20 பேரிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்றவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா என வடக்கு மாகாணத்தில் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது சுயதனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் நிலையில் அவர்களது மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 8) புதன்கிழமை யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த இருவரிடமும் வவுனியாவைச் சேர்ந்த 10 பேரிடமும் கிளிநொச்சியைச் சேர்ந்த 8 பேரிடமும் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.


அவர்கள் 20 பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.