இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 189 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 42 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் மேலும் 228 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது