"கொரோனா" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, March 29, 2020

"கொரோனா" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை!

ஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள்ளனர்.

தொடரூந்து தண்டவாளம் அருகே  அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதால் தாமஸ் ஷோஃபர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியின் நிதி மையமான பிராங்பேர்ட் நகர்  அமைந்துள்ள ஹெஸ்ஸே மாநிலத்திற்கான நிதி அமைச்சராக இருப்பவர் என்பது குறிப்பிட தக்கது.


கொரோன வைரஸ் COVID-19  தொற்றுநோயால் ஷெஃபர் கணிசமான கவலை மற்றும் மன அழுத்தத்தில் வாழ்ந்து வந்ததாகவும் "மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை, குறிப்பாக நிதி உதவியைப் பொறுத்தவரை, அவரால் நிறைவேற்ற முடியுமா என்பதுதான் அவரது முக்கிய கவலையாக இருந்ததாகக சக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.