ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில், பங்குனி திங்கள் 2ம் திங்களான இன்று கிளிநொச்சி- உருத்திரபுரம் பொறிக்கடவை அம்மன் ஆலயத்தில் கூடிய மக்களை காவல்துறையினர் வெளியேற்றி வீடுகளுக்கு அனுப்பியுள்ளனா்.
பங்குனி திங்கள் 2ம் நாளான இன்று காலை கோவிலுக்கு பெருமளவான பக்தா்கள் சென்றிருந்த நிலையில், குறித்த விடயம் தொடா்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், ஆலயத்திற்கு சென்றிருந்த பொலிஸாா் ஆலயத்திலிருந்த பக்தா்களை உடனடியாக வெளியேறி வீடுகளுக்கு செல் லுமாறு பணித்த நிலையில், மக்கள் கோவிலிலில் இருந்து வெளியேறினா்.
ஆலயத்திற்கு வரவேண்டாம் என ஆலய நிா்வாகம் கூறியிருந்தபோதும் மக்கள் ஆலயத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.