பிரித்தானியாவில் இன்று முதல் ஊரடங்கு, விதிகளை மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 23, 2020

பிரித்தானியாவில் இன்று முதல் ஊரடங்கு, விதிகளை மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராட கடுமையான புதிய தடைகள் பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று இரவில் இருந்து மக்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும்.  தமது அத்தியாவசியத் தேவைகள், உடற்பயிற்சி, மருத்துவத் தேவை போன்றவற்றுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர்.
அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகள் மூடப்பட வேண்டும் என்றும், ஒன்றாகச் சேர்ந்து வசிக்காத இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவது தடை செய்யப்படுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உயிரிழப்பு எண்ணிக்கை 335 ஐ எட்டியுள்ளநிலையில் இந்தக் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மக்கள் இந்த விதிகளைப் பின்பற்றாவிட்டால், அபராதம் மற்றும் அவர்களைக் கலைந்து செல்லச் செய்வதற்கு பொலிஸாருக்கு விசேட அதிகாரம் வழங்கப்படுகின்றது என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று இரவு 8.30 க்கு தொலைக்காட்சி மூலமாக அறிவிப்பு விடுத்துள்ளார்.