கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு-முதல்கட்ட பரிசோதனை ஆரம்பம்!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, March 17, 2020

கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு-முதல்கட்ட பரிசோதனை ஆரம்பம்!!


அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைஸுக்கு, இதுவரை ஒரு லட்சத்து 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 ஆயிரத்து 130 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சீனாவில் 3 ஆயிரத்து 213 பேர் பலியாகி உள்ளனர். அடுத்ததாக இத்தாலி நாட்டில் 2 ஆயிரத்து 158 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது பரிசோதனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. mRNA -1273 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்தை அமெரிக்காவின் தேசிய சுகாதார மையத்துடன் இணைந்து மொடெர்னா என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்தினை முதற்கட்ட பரிசோதனையாக, முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 18 வயது முதல் 55 வயது வரை உள்ள 45 நபர்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 வாரங்களுக்கு நடைபெறும் இந்த சோதனையின் முதல் நபாராக ஒருவருக்கு இம்மருந்தானது இன்று செலுத்தப்பட இருக்கிறது.

இது குறித்து பேசியுள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், mRNA-1273 என்றழைக்கப்படும் மருந்து, சோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் கையில்தான் செலுத்தப்படும் என்றும், அவர்களுக்கு காய்ச்சல், உடல்நலக்குறைவு ஏதேனும் ஏற்படுகிறதா என கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனை வெற்றி பெற்றாலும் மருந்தானது வெளிவர ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.