யாழ்ப்பாணத்தில் வீடு வீடாக கொரோனா பரப்பிய குறுக்கால போன உள்ளூர் போதகர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 23, 2020

யாழ்ப்பாணத்தில் வீடு வீடாக கொரோனா பரப்பிய குறுக்கால போன உள்ளூர் போதகர்கள்!

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் மையத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கும் நிலையில்

இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தான் சுவிஸ் போதகருடன் இலங்கையில் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எனவும் சுவிஸ் போதகர் இலங்கை வந்தது முதல் திரும்பி சென்றது வரை அனைத்தும் இவரின் ஏற்பாட்டிலேயே நடந்தது என்றும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. அத்துடன் குறித்த சுவிஸ் போதகர் வந்து சென்ற பின்னரும் அவருடன் சேர்ந்து திரிந்த உள்ளூர் மத போதகர்கள் மானிப்பாய் பகுதி உட்பட பல பகுதிகளில் வீடுகளில் கூட எழுப்புதல் செயற்பாட்டை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களில் உள்ளவர்களைப் பிடித்து விசாரித்தால் யாழ்ப்பாணத்தில் பலர் காப்பாற்றப்படலாம் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

இந்தப் புகைப்படத்தில் இருப்பவன் மானிப்பாய் பகுதியில் வீடுகளுக்குச் சென்று எழுப்புதல் நடாத்தி வருபவன் என்றும் சுவிஸ் போதகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவன் என்றும் தற்போதும் எழுப்புதல்களை இரகசியமாக செய்து வருகின்றான் எனவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.