இலங்கையில் கொரோனா தொற்றியோர் தொகை அதிகரிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 14, 2020

இலங்கையில் கொரோனா தொற்றியோர் தொகை அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  7 ஆக அதிகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும், நாத்தாண்டிய பிரதேசத்தில் ஒருவரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.அவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள்.

இதேவேளை நேற்று 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த 3 நோயாளர்களில் ஒருவர் 41 வயதுடையவர் எனவும் அவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய 2 நோயாளர்களும் கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.