வீடொன்றில் தீ பரவியதில் பொருட்கள் தீக்கிரை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 30, 2020

வீடொன்றில் தீ பரவியதில் பொருட்கள் தீக்கிரை!

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இன்று காலை வீடொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டில், வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் திடீரென வீட்டினுள் தீ பற்றி எரிந்துள்ளது. தீ பரவலை அவதானித்த அயலவர்கள் உடனடியாக வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் தீ காரணமாக வீட்டின் உள் பகுதி முழுமையாக எரிந்துள்ளதுடன் இலத்திரனியல் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

மின்சார ஒழுக்குக் காரணமாக இத் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.