இலங்கையில் சுகாதார அவசரகால நிலை தொடர்பாக பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 12, 2020

இலங்கையில் சுகாதார அவசரகால நிலை தொடர்பாக பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்தால் ஒரே தடவையில் 1000 இற்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி அவர்களுக்கு மருத்து சிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுப்பர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் மற்றும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டால் அச்சூழ்நிலையினை கையாளும் விதம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போதே பிரதமர் இவ்வாறு கூறினார். மேலும் சுகாதார அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுமாயின் சுகாதார தன்மையான முககவசம் மற்றும் மருத்துவ வசதிகளுக்கான பொருட்களின் உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வு பத்திரங்களை அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு பிரதமர் விசேட ஆலோசனை வழங்கினார்.

கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தினால் உற்பத்தி மூலப்பொருட்கள் இறக்குமதியில் பற்றாக்குறை நிலவுகின்றது. ஆடை உற்பத்தி, மருந்து வகை உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் குறித்தும் இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது.  இச்சந்திப்பில் அமைச்சர்களாக விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, பிரதமர் செயலாளர் காமினி செனரத், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டார்கள்.