வவுனியா கொரோனா மையத்துக்கு எதிர்ப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 14, 2020

வவுனியா கொரோனா மையத்துக்கு எதிர்ப்பு


வவுனியா - பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா கண்காணிப்பு தடுப்பு முகாமுக்கு பயணிகள் கொண்டு வரப்பட்டதை கண்டித்து 
நெளுக்குளத்தில் இன்று (14) கண்டன போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா- தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடைபெற்றது.

‘அகற்று அகற்று கொரோனா முகாமை அகற்று’, ‘கொரோனா வைரஸ் வவுனியாவிற்கு வேண்டாம்’, ‘தமிழர் பிரதேசத்தில் கொரோனா முகாமை எதற்காக அமைத்தாய்’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.