புத்தளம் விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 7, 2020

புத்தளம் விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு!


புத்தளம்-முள்ளிபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரித்தனர்.

புத்தளம் பெரிய பள்ளியிலிருந்து தொழுகைக் கடமையை நிறைவேற்றிவிட்டு பின்னர் வீட்டுக்கு சைக்கிளில் சென்றபோது முதியவர் முள்ளிபுரம் பகுதியிலிருந்து புத்தளம் நகரை நோக்கிப் பயணிதத் மோட்டார் சைக்கிளில் மோதி இன்று (சனிக்கிழமை) விபத்துக்குள்ளானார்.

இதன்போது 74 வயதுடைய வயோதிபர் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.