உலகளவில் கொரோனா தொற்று (கோவிட்- 19) கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து வியாபித்து வருகிறது. சீனாவில் உயிரிழப்பு 3,000 ஐ கடந்துள்ளது. இத்தாலியில் 100ஐ கடந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவாகியதையடுத்து, அங்கு அவசரநிலைமை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது.
உலகில் 93,000 க்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்காவில் பல இறப்புகள் பதிவாகியுள்ளது. புதிய தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களையும் பயணக் கட்டுப்பாடுகளையும் இந்த அரசுகள் உருவாக்குகின்றன.
போலந்து, மொராக்கோ, அன்டோரா, ஆர்மீனியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸினால் முதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
உலகம் முழுவதிலுமாக கொரோனா தொற்று தொடர்பான பிந்தைய தகவல்களின் தொகுப்பு இது.
3,000ஐ கடந்தது உயிரிழப்பு
சீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,000 ஐ கடந்துள்ளது. இன்று காலை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிவித்தலில், 3,012 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தது.
நேற்று 31 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
கொரோனா.தொற்றினால் நேற்று 139 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் 119 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பாதிப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு தென்பட்டது.
கொரோனா தொற்றினால் 80,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியாவில் அவசர நிலை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு 53 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியிருந்த நிலையில், நேற்று மாகாணத்தில் முதலாவது மரணம் பதிவாகியது. இதையடுத்து மாகாண ஆளுனர் கவின் நியூசோம் அவசரகால நிலைமையை இன்று பிரகடப்படுத்தியுள்ளார்