எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏபரல் மாதம் 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வீட்டிலிருந்து வேலை செய்வதற்குரிய காலப்பகுதியாக பிரகடனபடுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை வினைத்திறணாக மாற்றுவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் குறித்த காலப்பகுதி அரச விடுமுறை தினமாக கருதப்படமாட்டாது.
பொது மக்களுக்கான சேவை தொடர்ந்து முன்னெடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதோடு மக்கள் ஒன்று சேர்வதை தடுத்து மக்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதே நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.