24 மணித்தியாலங்கள் கடந்தும் கைதுசெய்யப்படாத ரவி கருணாநாயக்க! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 7, 2020

24 மணித்தியாலங்கள் கடந்தும் கைதுசெய்யப்படாத ரவி கருணாநாயக்க!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவி கருணாயநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணை குழுவொன்று இன்று காலை ரவிகருணாநாயக்கவின் பத்தரமுல்லை - ரஜமல்வத்தை வீதியில் உள்ள இல்லத்திற்கு சென்றிருந்தனர்.

எவ்வாறாயினும், குறித்த விசேட விசாரணைக்குழுவினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்கவின் இல்லத்திற்கு சென்றபோதும் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று பிற்பகல் 4.30 அளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மற்றுமொரு விசேட அதிகாரிகள் குழுவொன்று சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.

அதன்பின்னர் 10 நிமிடத்திற்கு பின்னர் அதிகாரிகள் இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் பெர்பச்சுவல் ட்சரிஸ் நிறுவனத்தின் 8வது சந்தேகநபரான முத்துராஜா சுரேந்திரன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், பெர்ப்பர்ச்சுவல் ட்றெசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன உள்ளிட்ட 10 சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.