கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலியில் நேற்று 743 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் இத்தாலியின் மொத்த உயிரிழப்பு 6,820 ஆக உயர்ந்தது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு உயிரிழப்பு குறைவடைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் உயிரிழப்பு எகிறியுள்ளது.
இதேவேளை, நேற்று உலகளவில் 2,000 இற்கும் அதிகமானவர்கள் கொரொனாவினால் உயிரிழந்தனர்.
ஸ்பெயினின் நேற்று ஒரே நாளில் 514 பேர் உயிரிழந்தனர். ஸ்பெயினின் உயிரிழப்பு அ2,696 ஆக உயர்ந்தது. அத்துடன் 6,600 பேர் புதிதாக நோய்த் தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் 39,673 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.
பிரான்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை 240 பேர் கொரோனாவினால் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,100 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கொரொனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து 1,000 பேருக்கும் அதிகமான உயிரிழப்பை சந்திக்கும் ஐந்தாவது நாடாக பிரான்ஸ் பதிவாகியது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,444 பேர் புதிதாக அந்த நாட்டில் தொற்றிற்க இலக்காகினர். இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22,300 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் வைரஸ் தொற்றினால் 10,176 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 2,516 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இத்தாலி, சீனா, ஸ்பெயின், ஈரான் ஆகியவை 1,000 இற்கும் மேற்பட்ட உயிரிழப்பை சந்தித்த நாடுகளாக பதிவாகியிருந்தன. தற்போது, பிரான்ஸ் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, உலகளவில் 18,500 க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். தொற்றிற்கு இலக்கான 418,000 பேரில் கிட்டத்தட்ட 108,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஈரானில் நேற்று 1,762 பேர் தொற்றிற்கு இலக்காகினர். இதன்மூலம் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 24,811 ஆக பதிவாகியது.
நேற்று 122 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1,934 ஆக உயர்ந்தது.