வவுனியா பம்பைமடு பெரியகட்டு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு இன்று மாலை 4.45 மணியளவில் மேலும் 134 பேர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் 14 நாட்கள் தடுத்து வைத்து கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் வவுனியா தடுப்பு முகாமுக்கு 02 பஸ்களில் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த பயணிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கடந்த 13 ஆம் திகதி வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள தடுப்பு முகாமிற்கு 5 பேருந்துகளில் 265 வெளிநாட்டு பயணிகள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது