நேற்று சனிக்கிழமை இத்தாலியில் கொரோனா வைரஸினால் மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது. கொரொனா வைஸ் தாக்கத்தால் ஒரேநாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாக, 793 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் இத்தாலியின் உயிரிழப்பு 4825 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பையடுத்து, இத்தால் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. ஏப்ரல் 3ஆம் திகதி வரை அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடும்படி இத்தாலி உத்தரவிட்டுள்ளது.
“இது போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் மிகவும் கடினமான நெருக்கடி” என்று பிரதமர் கியூசெப் கோன்டே பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். “தேசிய உற்பத்திக்கு முக்கியமானது என்று கருதப்படும் உற்பத்தி நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.” என்றார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அவசர ஆணை மூலம் இந்த நடைமுறைகள் அமுலாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமையன்று இத்தாலி 793 உயிரிழப்புகளைப் பதிவுசெய்தது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் வைரஸ் பாதிப்புக்கள் மிக அதிகளவில் பதிவாகியுள்ளன.
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரித்த தரவுகளின்படி, உலகெங்கிலும் கிட்டத்தட்ட 13,000 பேர் உயிரிழந்துள்ளனர். 304,500 க்கும் அதிகமானோர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், கிட்டத்தட்ட 92,000 பேர் குணமடைந்துள்ளனர்.