அமெரிக்கா விடுத்துள்ள தடைக்கு எதிராக அஸ்கிரிய மல்வத்து பீடங்கள் கடும் எதிர்ப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, February 16, 2020

அமெரிக்கா விடுத்துள்ள தடைக்கு எதிராக அஸ்கிரிய மல்வத்து பீடங்கள் கடும் எதிர்ப்பு!

போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பில் கிடைத்த நம்பிக்கையான ஆதரங்களுக்கு அமைய இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளமைக்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சோபா போன்ற ஒப்பந்தங்களை கையெழுத்திட வைத்து இலங்கையை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும், எதிர்காலத்தில் இதே நிலைமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏனைய முக்கியஸ்தர்களுக்கும் ஏற்படாலம் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.