நீராவியடி விவகாரம்- ஞானசாரர் மீதான வழக்கு நாளை விசாரணை! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, February 16, 2020

நீராவியடி விவகாரம்- ஞானசாரர் மீதான வழக்கு நாளை விசாரணை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தமிழத் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணைகள் நாளை இடம்பெறவுள்ளது.

நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு வளாகத்தில் காணப்படும் நீராவியடி குருகந்தை விகாரையின் விகாரதிபதி தேரரின் பூதவுடலை நல்லடக்கம் செய்யும் போது ஞனசார தேரர் நீதிமன்ற தீர்ப்பை மீறிச் செயற்பட்டதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மேன் முறையிட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.