பாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் காதலர் தினத்தை முன்னிட்டு கோண்டாவில் டிப்போவுக்கு முன்னாள் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் விசேட விற்பனைக் கூடத்தில் காதலர்களுக்கான அன்பளிப்புப் பொருட்கள் விற்கப்படுகிறது இன்று பாடசாலை செல்லும் சிறுவர் சிறுமியரை வலிந்து கூவி அழைத்து அவர்களுக்கு காதலர்களுக்கு வழங்கும் பொருட்களை விற்பனை செய்வதை காணக்கூடியதாக இருந்தது பாடசாலை சீருடையுடன் சிறுவர்-சிறுமியரை ஏமாற்றிபணத்திற்காக இவ்வாறு சமூகத்தை சீரழிப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .